Best 10 Tamil Font Kathal Sms Kavithai Collections 2

கண்சிமிட்டாமல்
உன்னையே
பார்த்துக்கொண்டிருந்தேன்..
கொலைகாரனை போல
பார்க்காதே என்றாய்...
அடிப்பாவி,

முதல் பார்வைலேயே
என்னை கொன்றுவிட்டு
இப்பொழுது
என்னை
கொலைகாரன் என்கிறாயா...

காதலுடன்
ப.சுரேஷ்..

*******************************************************

உன் காதலுக்கு
கவிதை வேண்டும்,
தனிமை வேண்டும்,
முத்தம் வேண்டும்,
தென்றல் வேண்டும்,
குயில் வேண்டும்,

தோல் சாய்ந்து அமர
மரம் வேண்டும்,
எனக்கு
நீ மட்டும் போதும்...

காதலுடன்
ப.சுரேஷ்..

*******************************************************

எத்தனை நாட்கள்
தூக்கத்தை
இழந்திருக்கிறேன்
இந்த
ஒற்றை புன்னகையில்..

காதலுடன்
ப.சுரேஷ்..

*******************************************************

சில காதல்
சொல்லாமல் தெரிவதில்லை,
சில காதல்
சொல்லியும் புரிவதில்லை...
மொத்தத்தில்
காதல் யாருக்கும்

புரிவதில்லை...

காதலுடன்
ப.சுரேஷ்..

*******************************************************

எனக்கு காதல் செய்ய
ஒரு தேவதை வேண்டும்...
வரம் தரும்
தேவதை போல அல்ல,
என் வாழ்க்கையை தரும்
தேவதையை போல...

காதலுடன்
ப.சுரேஷ்..

*******************************************************
Tags: tamil font sms kavithai sms, feb 14 sms, love kavithaikal, kadhal soga kavithaikal, illamaiyana kathal kavithai, tamil font kathal kavithai sms collection tamil sms collections

Best 10 Tamil Font Kathal Kavithai Collections 1

இப்பொழுதெல்லாம்
இந்த காதல்
என்னை தூங்க விடுவதில்லை,
உன் காதலியை தேடிவிட்டு
உறங்கு என்கிறது காதல்,

காதலி கிடைத்தபிறகு
எங்கே உறங்குவது காதலே?...

உறக்கம் விற்றுத்தான்
இங்கு
காதல் வாங்க படுகிறது
காதலே..

காதலுடன்
ப.சுரேஷ்..

****************************************************

பாவம் இந்த காதல்
மனிதனிடம்
மாட்டிகொண்டு
பாடாய்படுகிறது... 

**************************************************** 

மூன்றாம்பிறையும்
முழுநிலவாய் தெரிகிறது,
பட்டாம்பூச்சியை
ரசிக்க பிடிக்கிறது,
தனிமை பிடிக்கிறது,
கவிதை பிடிக்கிறது,

தமிழ் பிடிக்கிறது,
உன் கண்கள் பிடிக்கிறது,
உன் சிரிப்பு பிடிக்கிறது,
உன் கோவம் பிடிக்கிறது,
கொஞ்சம் பொறு தேவதையே
இப்பொழுதுதான்
காதலுக்கு பக்கத்தில்
வந்திருக்கிறேன்...
விரைவில்
உன் பக்கத்திலும்....

காதலுடன்
ப.சுரேஷ்..

**************************************************** 

இந்த காதலில் மட்டும்தான்
யார் எழுதிய
கவிதையாயினும்
தன் காதலை(அ)காதலியை வைத்து
காதல் செய்ய முடியும்...

காதலுடன்
ப.சுரேஷ்..

**************************************************** 

அன்புத்தோழியே,
உன்னைப்பற்றி
எனக்கென்ன கவலை
என்று சொல்லிவிட்டு,
இப்படி
சொல்லிவிட்டோமே

என்று
கவலைபடுபவள்
நீ...

அன்புடன்
ப.சுரேஷ்...

**************************************************** 
Tags: tamil kavithai for lovers days, best tamil kathal kavithaikal collections latest tamil font kathal kavithai collections , kathalar dina kavithai, kathal valthu kavithai, puthu kavithai, feb 14 valthu kavithai, kathal soga kavitahi, kadhal kavithai malai, kadhal sms kavithai
Related Posts Plugin for WordPress, Blogger...

Join with us

Popular Posts

Share