பார்வையிலே பித்தனாக்கி,
பகவனைப் போல் கொல்லும்
இவள் சொல்கிறாள்...
அடுத்த பிறவியிலும்
எனது விழிகள்
உன்னையே தரிசிக்கு
மென்று...
சொல்லடி பெண்ணே..!
இன்னும் எத்தனை
முறை தான்
நான் இறப்பது..!?
*******************************************
பனித்துளியே...
உனக்கும் புல்லுக்கும்
உள்ள உறவு தான்,
எனக்கும் அவளுக்கும்
உள்ள உறவு...
உனக்கு எதிரி..
காலையில் உதிக்கும்
கதிரவன்..
எனக்கு எதிரி..
கனவைக் கலைக்கும்
பால்காரன்..!
*******************************************
Tags: tamil font kathal kavithai, tamil kavithaikal, tamil new kavithai, latest tamil kavithai sms, wonderful tamil font love kavithai sms, love cute line sms, sms collections 2012, 2012 latest and stylish sms collections